About

முன்னுரை

About Our CVTSS Community
சென்னை மாநகரில் பல துறைகளிலும் இருந்து வரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நம் சமூக பெருமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், சமூக பொருளாதார நிலைகளை உயர்த்திக் கொள்ளவும், சமூக பிரச்சனைகளை ஒருங்கிணைந்து தீர்க்கவும், நம்மிடையே ஒரு சங்கம் வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 1970 ஆண்டு, தலைவர் திரு.ஆ.ளு.ரெங்கையா அவர்களின் தலைமையில் பிறந்து, வளர்ந்து, கிளைத்து பு+த்து காய்த்துக் குலுங்கி கனியுடன் விளங்கும், இந்நாளிலே நம் எதிர்கால லட்சியங்களும், வளர்ச்சியடையும் என்ற சிறப்பு நோக்கோடு அமைந்த இவ்விழா நம் உள்ளத்தில் நிறைவாக நிற்கும்.
நம் சங்க உறுப்பினர்களின் நீண்ட நாளைய விருப்பத்திற்கு இணங்க அவர்களின் முகவரிகளை சேகரித்து தொகுத்து கிட்டத்தட்ட ஒரு 300 பேர்களின் முகவரிகளை சேர்த்து, 2001-ஆம் ஆண்டில் வெளியிட்டோம். தற்சமயம் கிட்டதட்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 750 குடும்பங்களுக்கு மேல் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் நம் சங்க ஆயள் உறுப்பினராக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சென்னையை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று மூன்று 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டத்திலும் அடங்கியுள்ள ஊர்கள்ட/பகுதிகள் தனியாக விபரமாக தரப்பட்டுள்ளன.
இந்த கையேட்டில் சில புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருமணமான ஒவ்வொருவரும் தனி உறுப்பினராக குறிப்பிடப்பட்டுள்ளன. மனைவியின் பெயரும் அவர்களின் சொந்த ஊர் போன்ற விபரங்களும் தரப்பட்டுள்ளன. அதிக சிரமமில்லாமல் ஒருவரின் இடத்தை சென்றடைய (டுயனெ ஆயசம) கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் நம்மை நாம் நன்கு அறிந்துக் கொள்வதற்கே இம்முறை முகவரிகளுடன் சில பயனுள்ள சமுதாய, ஆன்மீக, ஆரோக்கிய மற்றும் பொது செய்திகள் தரப்பட்டுள்ளது.
இம்முகவரி கையேடு முழுமையானது அல்ல, விடுபட்ட மற்ற உறவினர்களின் முகவரிகளையும் விரைவில் சேகரித்து வெளியிட உள்ளோம். அனைவரும் விடுபட்ட முகவரிகளை தந்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
குறுகிய காலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முகவரிகளை சேகரித்து, வெளியிட உதவிய உப தலைவர் நா.சிவகுருநாதன், செயலாளர் அ.மு.தி.குத்தாலிங்கம், உதவி செயலாளர் அ.முத்துகுமாரசாமி ஆகியோரின் கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். அவர்களுக்கு உதவிய ஏனைய செயல் வீரர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு வேண்டுகோலுக்கு இணங்கி விளம்பரம், கட்டுரைகள் தந்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்நூல் வெளிவர பலவகையிலும் பங்கேற்று பாங்கான ஓர் அச்சுகோவையில் அழகிய முறையில் வடிவமைக்க ‘மதுராவாயில் டாக்” ஆசிரியர் எம்.பாண்டி சுபா அவர்களுக்கு எனது நன்றிகள்.
எங்களால் முடிந்தவரை பிழைகள் ஏதும் இல்லாமல் தர முற்பட்டுள்ளோம் பிழைகள் ஏதும் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறோம்.
மு.சிவராமன் தலைவர்

செங்குந்தர் உறுதிமொழி

நாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக, மனசாட்சியுடன் கீழ்க்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.
  • நாம் இந்தியக் குடிமக்களாய் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டதிட்டங்களுக்குக், கட்டுப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.
  • நாம் செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு, நமது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சமூக, பொருளாதார, கல்வி, தொழில், கலாச்சார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம், சமூகநலம் காப்போம்.
  • நாம், மற்ற இனத்தவரிடம் மனிதநேயம் கொண்டு, நம்புடனும், அன்புடனும், பழகுவோம்.
  • நாம், நமது உரிமைகளை பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்.
  • நாம் நமது சங்க நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு. சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.s

சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கம் நிர்வாகிகள்

செயல் வீரர்கள்