Community Development
நம் சமூகத்தினர் சென்னையில் எப்பகுதியில் இருந்தாலும், அனைவரும் தொடர்பில் இருந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். தம் குடும்பத்தையும், நம் சமூகத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல சங்கத்தின் செயல்பாடுகளுக்கு துணை புரிய வேண்டும்.
நம்மில் பலர் மாநில மற்றும் ஒன்றிய அரசு துறைகளில் பல பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் பலர் தனியார் துறைகளிலும், தொழிலதிபர்களாகவும் பெயர், புகழோடு வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வளர்ந்து வரும் நம் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துணை நின்று அனைவரின் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், முற்போக்குடன் முன்னேறும் நம் சமூகத்தினர், மற்ற சமூகத்தினருக்கும் உதவி புரிந்து நம் சமூகத்திற்கு நல்ல பெயரை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நம் சமூகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
நாம் ஒற்றுமையுடன் இருந்தால் தான் நமக்கு பின் வரும் சந்ததியினரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். மேலும், தஞ்சையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வரும் நம் சமூகத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க முடியும்.
இதற்கிணங்கவே, நம் சங்கத்தின் மூலம் பல சேவைகளை நடத்திவருகிறோம். நம் சமூக மாணவர்கள், மற்றும் பொருளாதார உதவி வேண்டும் பிற சமூக மாணவர்களுக்கும் நம் சங்கத்தின் சார்பில் நன்கொடைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருமண சேவை, வேலைவாய்ப்பு சேவை, என பல சேவைகளும் நம் சங்கத்தின் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.
Educational Services
சங்கத்தின் வளர்ச்சிக்கும் கல்வி நிதிக்கும் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
சங்க உறுப்பினர்கள், மற்றும் ஏனைய அன்பர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும், சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்விக்கும் நன்கொடைகள் கொடுத்து உதவிபுரியுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். தரும் சிறு பங்களிப்பு நம் சமூக மக்களின் மேம்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும்.
கல்வி உதவி
நம் சமூகத்தில் வளர்ந்து வரும் குடும்பத்தினர் அவர்தம் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கும் முயற்சியில் நம் சங்கமும் பங்கேற்கும். நம் குழந்தைகள் நாட்டில் எந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்பினாலும் சரி, அல்லது வெளிநாடுகளில் சென்று மேற்படிப்பு படிக்க விரும்பினாலும் சரி, அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் படிப்பு காலம் முழுவதும் அவர்களுக்கு துணை நிற்போம். இவ்வாறு படித்து முன்னேறும் நம் குழந்தைகள் பின்னாட்களில் நம் சமூகத்திற்கு நற்பெயர் சேர்க்கும் செல்வங்களாக வளர்ந்து வருவர். குழந்தைகளின் கல்விச்செலவுகளுக்கு நம் சங்கத்தின் நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தொகையிலிருந்து சங்க உறுப்பினர்கள் அவர்தம் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தேவைப்படும் தொகையை நிர்வாகத்திடம் கேட்டு வாங்கிகொள்ளலாம்.
நன்கொடைகள் அளித்து உதவ முன்வரும் அன்பர்கள் கீழ்காணும் வங்கி கணக்கிற்கு தங்களின் விருப்பத்திற்கேற்ற தொகையை மாதாமாதமோ, அல்லது மொத்தமாகவோ கொடுக்கலாம். தாங்கள் அளிக்கும் நன்கொடைகள், அவற்றின் மூலம் சங்கம் செய்த செலவுகள், ஆகிய விவரங்கள் அனைத்தும் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் விரிவாக விவரிக்கப்படும்.
Chennai Vazh Thanjai Sengunthar Sangam
Union Bank of India, Armenian Street.
Current Account: 5274 0101 0011 765
IFSC Code: UBIN0552747
Chennai Vazh Thanjai Sengunthar Sangam
Union Bank of India, Armenian Street.
Current Account: 5274 0101 0011 765
IFSC Code: UBIN0552747
திருமண சேவை
நம் சமூகத்தின் இளைஞர்களுக்கான திருமண சேவை மையம் மற்றும் பிற திருமணம் சார்ந்த சேவைகள். நமது தஞ்சை மாவட்ட செங்குந்தர்கள் சென்னையில் மட்டும் இல்லாமல் நமது நாட்டில் பல முன்னணி நகரங்களிலும், பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களின் திருமணத்திற்கு தகுந்த வரன் தேடுவது என்பது சற்று கடினமான செயலாகும். அவர்களின் கல்வித் தகுதிகள், வருமானம், உயரம், இராசி, நட்சத்திரம் மற்றும் பிற சாதக பாதகங்களை அறிந்து பொருந்தமான ஒருவரை சேர்ந்து எடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த சவால்களை கடந்து அவர்களுக்கான வரன்களை நமது சமூகத்தில் தேடவும், சரியான இணையரை தேர்ந்து எடுக்கவும், நமது சங்கத்தின் திருமண சேவை உதவி புரியும்.
உறுப்பினர்களின் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளின் விவரங்களை நமது சங்கத்தில் பதிந்து கொள்வது மூலம், திருமண வயதில் இருக்கும் உங்கள் மக்களுக்கு தேர்ந்த வரன்களின் விவரங்களையும் பெற முடியும். இது நம் சமூக இளைஞர்களின் திருமணத் தடங்கல்களை குறைத்து நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
நமது சங்கத்தின் உறுப்பினர்களின் திருமண வயது வந்த பிள்ளைகளின் சுயவிவரப் புத்தகமானது ஆண்டு தோறும் வெளியிடப் படுகிறது. இப்புத்தகத்தில் தங்கள் மக்களின் விவரங்களை சேர்ப்பதற்கு நிர்வாகத்தை அணுகி விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளவும்.
நம் சமூகத்தில் பிறந்து சென்னையில் வாழும் மக்களுக்கான ஒரு எளிய மற்றும் நயமான திருமண சேவை.
வேலை வாய்ப்பு
சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர்களில் பலர் நல்ல கல்வி கற்று, அரசாங்கம் மற்றும் தனியார் பணியிடங்களில் உயரிய பணியிடங்களில் வேலை செய்து சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் பலருக்கு தங்கள் கல்விக்கு ஏற்ற வேலையும், ஊதியமும் கிடைப்பதில்லை. இன்னும் சிலருக்கு சரியானதொரு பணியும் கிடைப்பதில்லை. இந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க நமது சங்கத்திலே ஒரு வேலை வாய்ப்பு சேவை மையம் துவங்கப்பட உள்ளது.
நமது சங்க உறுப்பினர்கள் தங்களது சுயவிவரங்கள், கல்வித் தகுதிகள், திறமைகள் அனுபவங்களை மற்றும் பணியிட எதிர்பார்ப்புகளை நமது சேவை மையத்தில் பதிந்து கொள்ளலாம். அதே போல தொழில் சய்வோர் மற்றும் ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிலையில் உள்ள உறுப்பினர்கள், தங்கள் நிறுவனங்களில் உள்ள மனிதவளத் தேவைகளை நமது சங்கத்திடம் தெரிவிப்பது மூலம் சரியானவர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்க முடியும். மேலும் இது நம் சமூக மக்களின் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
கல்வி கற்று முடித்த இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.